Archive

Posts Tagged ‘Islam’

7Am Arivu Movie Review.

October 4, 2011 Leave a comment
Aamir Khan with director A. R. Murugadoss

Image via Wikipedia

ஏழாம் அறிவு திரைவிமர்சனம்:

சூர்யாவின் அசத்தலான நடிப்பில் நடிப்பில்  எ.ஆர்.முருகதாஸ்சின் அதிரடி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில்  வெளிவந்திருக்கும் இருக்கும் படம் தான் இந்த ஏழாம் அறிவு.

தமிழ் சினிமா இதுவரை பார்காத திரைகளம் இது வரை பார்காத ஆக்சன், இதுவரை பார்காத  தொழில்நுட்பம் என இதுவரை அனுபவிக்காத ஒரு அனுபவத்தை தந்து இருக்கின்றார் நம்ம  எ.ஆர்.முருகதாஸ். படம் ஆரம்ப முதலே பரபரப்பு. அதுவும் முதல் அந்த பதிநைந்து நிமிட  காட்சிக்கு நாம் படத்திற்கு குடுத்த பணம் முடிந்துவிட்டது.

பலமான படத்திற்கு பலமே அதில் நடித்த நடிகர்களின் நடிப்பும் அவர்களின் ஈடுபாடும்  தான். அதிலும் சூர்யாவின் நடிப்பு நாம் எதிர்பார்காத ஒன்று. இத்தனை ஈடுபாட்டுடன்  ஒரு நடிகன் அதுவும் தனது 26வது படத்திலே ஒரு நடிகனால் நடிக்க முடியுமா? என வியக்க  வைத்திருக்கின்றார்  மனுஷன்.

இரட்டை வேடம்: சர்கஸ் நாயகன் மற்றும் குங்பூவை உருவாக்கிய ஒரு துறவி என இரண்டு  சவாலான கதாபாத்திரம். இரண்டிலுமே மனதில் நிற்கின்றார் நம்ம சூர்யா.

அதுவும் அவருடைய அந்த குங்பூ சண்டை தமிழ் சினிமா வரலாற்றில்  சண்டைகாட்சிகளுக்கெல்லாம்  முன் மாதிரியாக இருக்க போகின்றது.

கலக்குங்க சூர்யா…. இனி ஒரு வருடம் உங்கள் நடிப்பைதான் தமிழ் சினிமா பேச  போகின்றது.

அப்புறம் அறிமுக நாயகியாக ஸ்ருதி கமல் ஹாசன். தமிழில்தான் இது இவருக்கு முதல்  படம். அதனை உணர்த்துவது போல் அழகான அளவான நடிப்பு. கமல் ஹாசன் நிச்சயம் பெருமைபட்டு  கொள்ளலாம்.

அப்புறம் அனய்யா இரண்டாவது சூர்யாவுக்கு ஜோடியாக வருகின்றார். மனதை விட்டு  மரையாத கதாபத்திரம் அவங்களுடையது.

வில்லனாக வரும் அந்த ஹாலிவுட் நடிகர் யப்பா சண்டை காட்சிகளில் அப்படி ஒரு  ஆக்ரோஷம். சண்டை கட்சிகள் உயிரோட்டமாக அமைந்ததற்கு இவருடைய பங்களிப்பு ஒரு முக்கிய  காரணம்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ஏற்கணவே பாடல்கள் ஹிட்டாகி விட்டன. பின்ணணி  இசையிலும் மிரட்டி இருக்கின்றார். ஆனால் ஏற்கனவே கேட்ட பீலிங் வருவதை தவிற்க்க  முடியவில்லை.

இப்படி ஒரு கதையை யோசித்தற்காகவே எ.ஆர். முருகதாஸ்சை எவ்வளவு வேண்டுமானாலும்  பாராட்டலாம்.
தமிழர்கள் எல்லாம் பெருமைபட கூடிய வகையில் ஒரு படத்தை தந்ததற்காக  ஒரு மிக பெரிய சல்யூட்.

தாங்ஸ் முருகதாஸ்.

கதையை கூறிவிட்டால் படதின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதால் அனைவரும் படத்தை
திரையில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

நான் இந்த படத்தை இரவு 2:30 மணி ஷோவில் வீட்டில் இருந்தவாறு டிரீம் லாண்டில்
(அதாங்க கனவு) பார்த்து ரசித்தேன்.

படத்தை பற்றிய என்னுடைய கமெண்ட்: தமிழ் சினமாவின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கி
வைத்திருக்கின்றார் எ.அர்.முருகதாஸ்

விமர்சனம் பிடித்து இருந்தால் தயவுசெய்து  உங்கள் ஓட்டை பதிவு  செய்யவும்.

உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்கின்றேன்

தங்கள் வருகைக்கு நன்றி