Top 10 Tamil Actor survive

Tamil actor Surya Sivakumar photographed in Er...

Image via Wikipedia

டாப் 10 தமிழ் நடிகர்கள்: ஒரு அலசல்:

முதலில் எனது எந்த வலையுளகிற்கு வருகை தந்த
உங்களுக்கு எனது நன்றி கலந்த  வணக்கங்கள். எனது இந்த பதிவு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்,மாற்று கருத்து  இருந்தாலும் தயவுசெய்து பின்னூட்டம் இடவும் என தாழ்மையுடன் கேட்டு  கொள்கின்றேன்.

பொதுவா எனக்கு சினிமா சம்பந்தமான பதிவு எழுதுவதில் அதிக ஆர்வம் கிடையாது. ஆனால்  சினிமா அதிக அளவு வாசகர் வட்டம் கொண்டது என்பதால் அது தவிற்க முடியாததாகின்றது.

சரி விஷயதுக்கு வருவோம்: இந்த போட்டியில் ரஜினியையும் கமலையும்
சேர்க்கவில்லை.  ஏன் என்றால் அவர்களையும் சேர்த்தால் முதல் இரண்டு இடத்திற்கு
போட்டிகள் இருக்காது.அவர்கள் இரண்டு பேரும் எப்போதும் நம்பர் ஒன்.

10வது இடம் ஜெயம் ரவி: ஜெயம் படத்தின் மூலம் அமர்களமாக அறிமுகமாகி சன் ஆப்
மகாலச்சுமி என அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர். வேறு  இயக்குனர்களின் படங்களில் இவர் நடித்த படங்கள் சரியாக போகாத நிலையில் பேராண்மை மற்றும் சந்தோஷ்  சுப்ரமணியம் ஆகிய படங்கள் இவரை தூக்கி நிருத்தியது. நல்ல நடிகர். டான்ஸ், சண்டை  காட்சிகள், ரொமான்ஸ் என சகல துறைகளிலும் அசத்துவார். இவர் படங்களை குடும்பத்துடன்  சென்று பார்க்கலாம் என்பது இவரின் சிறப்பு. அதிக பெண் ரசிகர்கள்  கொண்டவர். இவரின் குடும்பமே சினிமா துறையில் உள்ளது இவரின் கூடுதல் பலம்

குறிப்பு: இவரை விட அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர் ஜீவா டாப் 10
நடிகர்கள் பட்டியலில் இல்லை என்பது எனக்கே கொஞ்சம் வருத்தமாக
இருக்கின்றது.(ராம்,டிஷ்யூம்,கற்றது தமிழ்,சிவா மனசுல சக்தி,கோ)

9வது இடம் புரட்சி தளபதி விஷால்: இவருடைய பட்டத்தை பார்த்தாலே பத்திகிட்டு
வருது. புரட்சி என்பதன் அர்த்தமே போய்விட்டது. பேர் சொல்லுர மாதிரி ஒரு படமும்
கொடுக்கவில்லை(அவன் இவன் தவிர). ஆனாலும் இவர் படத்துக்கு கமர்சியல் மதிப்பு இருப்பதாக  கூறிகொள்கின்றார்கள்.எனக்கு என்னமோ அப்படி தெரியவில்லை. இவர் நடித்ததில் எனக்கு  பிடித்தது செல்லமே,சண்ட கோழி,அவன் இவன் மட்டுமே. நல்ல நடிகன் மாதிரிதான் தெரியுது  ஆனால் மாஸ் என்கிற போதையில் தடம் மாறுவது போல் தெரிகின்றது. டாப் 10னில் நீடிக்க  வேன்டுமானால் நல்ல கதைகளை தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.

அவன் இவனுக்கு முன்னாடி இவர் நடித்த மூன்று படமும் படு தோல்வி.

8 வது இடம் ஆர்யா:
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு ஈகோ பார்காத நடிகர்.  பாலாவின் நான் கடவுள் மூலம் மறு அவதாரம் எடுத்துள்ளார். மதராஷ பட்டினம்,பாஸ் என்கிற  பாஸ்கரன் அவன் இவன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.இவரின் திறமையை இவர்  இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை என்றுதான் தோன்றுகின்றது.

இனிமேல் தான் இவருக்கு உண்மையான போட்டியே இருக்கின்றது.

நடித்ததில் பிடித்தது: நான் கடவுள், மதராச பட்டிணம்,பாஸ் என்கிற
பாஸ்கரன்,அறிந்தும் அறியாமலும்,அவன் இவன்.

7வது சிம்பு என்கிற S.T.R:

எனக்கு சுத்தமா பிடிக்காத நடிகர் வானத்துக்கு முன்னாடி வரையும்.வானம் படம்
பார்த்தவுடம் அவர் மீது ஒரு நல்ல மதிப்பு வந்தது உண்மை. அது நீடிக்குமா? நீடிக்காதா
என்பது இனி வரும் அவரின் படங்களை பொருத்து. இவர் படம் தானாக ஒடுனதைவிட ஓட வைக்கபட்டது என்பதே என்னுடைய கருத்து.இவருடைய உண்மையான ஹிட் விண்ணைதாண்டி  வருவாயா தான்.அடுத்து வந்த வானமும் ஹிட் என்பதால் இனி வரவுள்ள இவரின் படங்களுக்கு  எதிபார்ப்பு கூடி இருக்கு.இவர் தனது படங்களுக்கு நல்ல பப்ளிசிடி தேடி கொள்வதில்  திறமையானவர்.

திறமையானவர் தான் ஆனால் இவரும் மாஸ் போதையில் அலைவது தான்  வருத்தமான விஷயம்.

சமீப காலமாக அஜித் ரசிகர்களை தன் பக்கம் இழுக்க  குறிவைத்துள்ளார்.அஜித் ரசிகர்களே ஜாக்கிரதை…..

6வது இடம் தனுஷ்:
நல்ல வேலை இவருக்கு பட்டங்கள் எதுவும் இல்லை.இவரின் வெற்றி  இவரே எதிர்பாராதது.ஆனாலும் கிடைத்த வெற்றியை திறமையாக தக்க வைத்து  கொண்டவர்.
முதல் மூன்று படங்களுமே அதிரி புதிரி வெற்றி…இடையில் சின்ன  சறுக்கம் ஆனாலும் பொல்லாதவன் மூலம் மீண்டு வந்தார்.திறமையான நடிகர் மிகவும்  இளவயதில் தேசிய விருது பெற்றிருக்கிறார்.வாழ்த்துக்கள்.

இவர் சிம்புவுக்கு  போட்டி என்றாலும் ஹிட் பட வரிசையில் இவர்தான் டாப். இவர் நடித்த நல்ல கதை அம்சம்  உள்ள படங்கள் எல்லாம் நன்றாக ஓடின ஆனால் மசாலா படங்கள் அனைத்தும் சுமாரான வெற்றியே  பெற்றன.(திருவிளையாடல் தவிர)

இவர் நடித்ததில் எனக்கு பிடித்தது    :துள்ளுவதோ இளமை,
காதல்  கொண்டேன், பொல்லாதவன், ஆடுகளம், திருவிளையாடல் ஆரம்பம்.

5வது இடம் கார்த்தி:
ரொம்ப சீக்கிரத்திலேயே டாப் 10னின் இடம் பிடித்த  நடிகர்.இவர் நடித்த படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.கார்த்தி என பெயர்  வைத்ததால் என்னவோ நவரச நாயகன் கார்த்திகிற்கு பிறகு ஒரு துள்ளல் நடிப்பும் நல்ல காமெடி டைமிங்கும் இவரிடம் இருக்கின்றது. சிறப்பாக கதையை தேர்வு  செய்கின்றார்.தனது ஐந்தாவது படத்திலேயே இரட்டை வேடம் ஏற்று வெற்றி பெறவும்  வைத்தவர்.

நல்ல எதிகாலம் இருக்கின்றது.தனது இடத்தை தக்க வைக்க கடுமையாக உழைக்க
வேண்டும்
நடித்ததில் பிடித்தது: எல்லா படமும் பிடிக்கும். அனைத்தும் வெவ்வேறான  அனுபவங்கள்

4வது விக்ரம்:
வியக்க வைக்கும் உழைப்பு,விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இவை  இணைந்ததுதான் விக்ரம்.வியக்க வைக்கும் நடிகர் தனது அயராத உழைப்பின்  தமிழ் சினிமாவில் தனியிடம் பிடித்திருக்கின்றார். பீமா, கந்தசாமி,இராவணன் போன்ற  தொடர் தோல்விக்கு பிறகு ஒரு கமர்சியல் சினிமா நடிக்காமல் தெய்வ திருமகளில் நடித்த  அவரின் துணிச்சல் பாராட்ட பட வேண்டியது.தமிழ் சினிமாவில் இவருக்கான அங்கிகாரம்  சற்று குறைவு என்றுதான் எண்ணுகின்றேன்.

தமிழுக்கு சிறந்த நடிகனாக தேசிய விருது பெற்று தந்திருக்கின்றார்.இவர்  நடிக்கும் படங்கள் தரமானவை என நம்பி செல்லலாம்.தொடர்ந்து தமிழுக்கு நல்ல  படங்கள் கொடுப்பார் என நம்புவோம்.

நடித்ததில் பிடித்தது: சேது,காசி, தில், தூள்,அன்னியன்,சாமி,மஜா(எனக்கு பிடிச்சு
இருந்தது)மற்றும் தெய்வ திருமகள்.

3வது  இளைய தளபதி விஜய்:

விஜய் ரசிகர்களுக்கு இது கோபத்தை ஏற்படுத்தலாம்.மங்காத்தா  வெற்றின் தாக்கம் தான் விஜயின் இறக்கம்.வேலாயுதம் வந்தால் இந்த நிலை மாறலாம்.இனி  வரும் படங்கள் மீண்டும் விஜயை நம்பர் ஒன்னாக்கும் என நம்புவோமாக!!  பூவே  உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும்,காதலுக்கு மரியாதை, லவ் டுடே என மென்மையான  படங்களில் நடித்து திருமலை,கில்லி,சிவகாசி,திருப்பாச்சி,போக்கிரி என அதிரடி நாயகனாக  ரசிகர்கள் மனதி இடம் பிடித்த விஜய், வில்லு, வேட்டைகாரன்,சுறா என தொடர் தோல்வி
படங்களில் நடித்து இப்போது நான்காவது இடத்தில் இருக்கின்றார். ஒரு காலத்திற்கு
அப்புறம் மக்களுக்கு சலிப்பு வரகூடிய படங்களில் நடித்து வெறுப்பை சம்பாதித்து
கொண்டார்.பின்னர் சுதாரித்து காவலன் என்ற ஹிட் படத்தை கொடுத்தார். இப்போது இவர்  நடித்து கொண்டிருக்கும் படங்கள் எல்லாமே மிகுந்த எதிபார்பிற்குறிய படங்கள் என்பதால்  மீண்டும் இவர் பழைய இடத்தை பிடிப்பார் என நம்புவோமாக.

நடித்ததில் பிடித்தது: பூவே உனக்காக,துள்ளாத மனமும் துள்ளும்,காதலுக்கு
மரியாதை,கில்லி,திருமலை,போக்கிரி,சிவகாசி,குஷி

2வது இடம் அஜித்:
மங்காத்தாவின் அதிரடி வெற்றி இவரை இரண்டாவது இடத்தில் உக்கார வைத்திருக்கின்றது.  முன்னனி நடிகர்களில் அதிகமான தோல்வி படங்களில் நடித்தது இவராகதான் இருக்க  முடியும்.அதையெல்லாம் தாண்டிய இவரது தன்னம்பிக்கைதான் இவரை இந்த இடத்தில்  உக்கார வைதிருக்கின்றது. நல்ல நடிகர் மட்டும் அல்ல. நல்ல மனிதரும் கூட.. தைரியசாலி  தனது ரசிகர்மன்றத்தை கலைத்தது அதற்கான சான்று.
இவரின் இந்த முடிவு வரவேற்க  கூடியது. இவர் அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்ததும் ஒரு பாராட்ட படகூடிய  விஷயம் இன்று இருக்க கூடிய முன்னனி இயக்குனர்களுக்கு முதல் பட சான்ஸ் கொடுத்து  திறையுலகில் அறிமுக படுத்திய பெருமை அஜிதையே சாரும்.

கதை தேர்வில் கூடுதல் கவனம் தேவை என்பதே என்னுடைய எண்ணம்.

சரண்.எ.ஆர்.முருகதாஸ், சூர்யா, இயக்குனர் விஜய், என பட்டியல் நீளும்.
நடித்ததில் பிடித்தது: காதல் மன்னன்,அமர்களம்,வரலாறு,வாலி,பில்லா, தினா,
போன்றவை

முதல் இடம் சூர்யா:

தமிழ் சினிமாவின் தற்போதய ஹாட் கேக்.. பாக்ஸ் ஆபிஸ் ஹீரோ..
உழைப்பு மற்றும் ஈடுபாடு கொண்ட இயக்குனர்களின் நடிகன். இவரை வைத்து படம்
எடுத்தவர்களே மீண்டும் இவரிடம் இணைந்து படம் எடுப்பது இவருடைய ஈடுபாட்டுக்கு
சான்று. வரிசையாக பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தவர். மாஸ் மற்றும் கிளாஸ் படங்களை மாறி  மாறி கொடுப்பவர்.

இயக்குனர் பாலாவினால் வாழ்வளிக்க பட்டவர்களில் இவரும் ஒருவர்.இவரின் ஆரம்பகால படங்கள் இவருக்கு பெயரெடுத்து தராத நிலையில் இயக்குனர் பாலாவின்
இயக்கத்தில் இவர் நடித்த நந்தா இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.அதை சரியாக
பயன்படுத்திகொண்ட அவர் படிபடியாக முன்னனி நடிகராக உயர்ந்து இன்று நம்பர் 1 அந்தஸ்தை  எட்டியிருக்கின்றார்.காக்க காக்க, பேரழகன்,பிதாமகன்,கஜினி,வாரணம்
ஆயிரம்,அயன்,சிங்கம் ஆகியவை பெயர் சொல்லும் படங்களாக அமைந்தது.

எ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்து கொண்டிருக்கும் ஏழாம் அரிவு மிகுந்த எதிபார்பை கிளப்பி  இருக்கின்றது.

நடிப்பு,ஆக்சன்,ரொமான்ஸ் என அனைத்திலும் சிறந்தவர்.அகரம் பௌன்டேசன் மூலம் ஏழை  குழந்தைகளுக்கு கல்வி அறிவு கிடைக்க உதவி வருகின்றார்.

தனக்கு கிடைத்த மக்கள் ஆதரவை சரியான வகையில் சரியான திசையில் பயன்படுத்துவதாக  எனக்கு படுகின்றது.

(முதல் மூன்று இடங்களில் மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.அது அவர்களின்  பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பொறுத்து)
எனக்கு தெரிந்த வரையில் நான் சரியான முறையில்  வரிசைபடுத்தி இருக்கிறேன் என நம்புகின்றேன். குறை இருந்தால் தயவுசெய்து தெரிய  படுத்தவும்.

குறிப்பு: டாப் 10 நடிகர்களில் அஜித்,விக்ரம் தவிர்த்து மற்ற நடிகர்கள் அனைவரும்
குடும்ப சபோர்ட் மூலம் சினிமா துறையில் நுழைந்தவர்கள்.

வந்தத வந்துடீங்க தயவுசெய்து உங்கள் ஓட்டையும் போட்டுட்டு போங்க….

  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a comment