Home > 2013, Country, selvabalaji > அமெரிக்காவின் குடியேற்ற சீர்திருத்த மசோதாவால் இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு வரும் ஆபத்து

அமெரிக்காவின் குடியேற்ற சீர்திருத்த மசோதாவால் இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு வரும் ஆபத்து

அமெரிக்காவில் கொண்டு வரப்பட இருக்கிற குடியேற்ற சீர்திருத்த மசோதாவால் இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு பெரும் ஆபத்து காத்துக் கொண்டு இருக்கிறது. இந்த மசோதா நிறைவேறினால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. குடியேற்ற சீர்திருத்த மசோதாவில் புதிதாக சேர்க்கப்பட இருக்கும் 8 அம்சங்கள் தான் இதற்கு காரணம். இந்த மசோதா நிறைவேறினால் வரும் பாதிப்புகள்.

1.ஐ.டி. நிறுவனங்கள் ஹெச்-1பி விசாவில் பணிபுரியும் பணியாளர்களை தங்களுடைய வாடிக்கையாளரின் பணியிடத்தில் பணியில் ஈடுபடுத்தவோ, அந்தக் குறிப்பிட்ட பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கவோ தடை விதிக்கப்படும்.

2.வேலைக்கு அனுப்பும் எல்-1 தொழிலாளர்களை இந்திய நிறுவனங்கள் மேற்பார்வையிடுவதோடு கட்டுப்படுத்த வேண்டும். அந்த தொழிலாளர்களுக்கான அமெரிக்க நிறுவனம் 90 நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவில் அதே பகுதியில் உள்ள எந்த ஒரு பணியாளர்களையும் ஆட்குறைப்பு செய்யவில்லை என உறுதி அளிக்க வேண்டும்.

3.ஹெச்-1பி மற்றும் எல்-1 தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கிறது. இந்த குடியேற்ற மசோதாவின் கீழ் அமெரிக்க நிறுவனத்தில் மொத்தமாக உள்ள ஹெச்-1பி மற்றும் எல்-1 தொழிலாளர்களின் சதவீதத்திற்கு ஒரு எல்லையை நிர்ணயிக்கலாம்.

4.மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ள இந்த மசோதா, அக்டோபர் 1, 2014 முதல் செப்டம்பர் 30, 2015 வரையிலான காலகட்டங்களில் ஹெச்-1பி மற்றும் எல்-1 தொழிலாளர்களின் அதிகபட்ச விகிதம் 75 சதவீதமாகவும், அக்டோபர் 1, 2015ல் இருந்து செப்டம்பர் 30, 2016 வரை 65 சதவீதமாகவும், அக்டோபர் 1, 2016க்கு பிறகு 50 சதவீதமாகவும் இருக்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது

 

  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: