Home > Our Country > கவர் ஸ்டோரி

கவர் ஸ்டோரி

25.09.08 கவர் ஸ்டோரி

`ந்திரன்படப்பிடிப்புக்காக `பெருநாட்டிற்குச் சென்றிருக்கும் தங்களின் தலைவர் எப்போது சென்னை திரும்புவார் என ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களும், மன்றப் பொறுப்பாளர்களும் வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வருகிற 27 அல்லது 30-ம் தேதி சென்னை திரும்பும் ரஜினி, வரும் மஹாளய அமாவாசைக்குப் (28-ம் தேதி) பிறகு புரட்டாசி மாத வளர்பிறையில் முப்பது மாவட்ட மன்ற நிர்வாகிகளையும் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனியே சந்திக்க இருக்கிறாராம்.

புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை என்பது, `தொட்டது துலங்கும்அம்சம் கொண்டதாம். அப்போது எடுக்கும் எந்த ஒரு புது முயற்சியும் மிகப் பெரிய அளவில் வெற்றியையும், திருப்புமுனையையும் ஏற்படுத்தித் தருமாம். அதனாலேயே புரட்டாசி மாத வளர்பிறை நாட்களை தன் ரசிகர்களைச் சந்திப்பதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் சூப்பர் ஸ்டார், அப்போது ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்யும் அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட இருப்பதாகத் தகவல்.

கூடவே, தான் திட்டமிட்டிருக்கும் மற்றொரு மெகா பிளான் குறித்து ரசிகர்களின் கருத்துக்களைக் கேட்டறியவும் அவர் திட்டமிட்டிருக்கிறாராம். தனது தலைமையின் கீழ் பொதுவான அமைப்பு(!) ஒன்றைத் தொடங்குவதுதான் ரஜினியின் அதிகாரபூர்வமான முதல் அறிவிப்பாக இருக்குமாம். அடுத்ததாக, தங்களுக்கென்றே தனி டி.வி. சேனல் ஒன்றையும் ரஜினி தொடங்கப் போகிறாராம். இந்த டி.வி. சேனலை நிர்வகிக்கப் போவது யார் தெரியுமா? சூப்பர் ஸ்டாரின் இரண்டாவது மகளான சௌந்தர்யா!

புது அமைப்பு, தனி சேனல், இந்த இரண்டு விஷயங்களைப் பற்றித்தான் தலைவர் தங்களை அழைத்து ஆலோசனை செய்யப் போகிறார் என்பதை உறுதியாக அறிந்து கொண்ட சில மாவட்டப் பொறுப்பாளர்கள், ரஜினியை அசத்தும் விதமாக, அந்த அமைப்புக்கும், சேனலுக்கும் என்ன பெயர் வைக்கலாம் என்பதையெல்லாம் கிட்டத்தட்ட முடிவு செய்து விட்டார்களாம்.

அதாவது, சேனலுக்கு `ரஜினி டி.வி‘. என்றும் பொது அமைப்புக்கு மக்கள், ஜனநாயகம், குரல் என்று ஏதாவதொரு பெயர் வைக்கலாம் என்பதும் அவர்கள் ஐடியா. சேனலுக்கு ரஜினி டி.வி. என்று பெயர் வைப்பதை தலைவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால் அப்படி பெயர் வைத்தால்தான் மக்கள் மத்தியில் எடுபடும் என்பதை எடுத்துக்கூறி ரஜினியை ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும் என்பதில் மாவட்டப் பொறுப்பாளர்கள் உறுதியாக இருக்கிறார்களாம்.

அமைப்புக்கு `குரல்என்று தாங்கள் வைத்திருக்கும் பெயர் ரஜினியை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணும் என்றும் நம்புகிறார்கள் மன்றப் பொறுப்பாளர்கள். காரணம், `தமிழக அரசியலைப் பொறுத்தவரை `வாய்ஸ்‘ (குரல்) என்றாலே, அது ரஜினி சொல்வதை மட்டும்தான் குறிக்கும். ஆகவே, தலைவர் தொடங்கப் போகும் அமைப்புக்கு `வாய்ஸ்என்ற பெயரே

Categories: Our Country
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: