Home > Our Country, selvabalaji, Uncategorized > இந்தியா எப்போது வல்லரசு ஆகும்?

இந்தியா எப்போது வல்லரசு ஆகும்?


வெற்றியாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

சி. செந்தில், பொள்ளாச்சி

தான் நினைத்தது, வாழ்வில் என்றாவது நிகழும்என்று சாதாரண மனிதன் காத்திருக்கிறான். வெற்றியாளனோ தான் நினைத்ததை நிகழ்த்திக் காட்டுகிறான்.

இவர்களைத் தவிர, இன்னொரு வகை மனிதனும் உண்டு. அவன், ‘அட இது எப்படி நிகழ்கிறது?!’ என்று ஆச்சரியமாக வாய் பிளந்தபடி, ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்த்துக் காலம் கழிக்கிறான்!



இந்தியா வல்லரசாகும் அந்த நாளை, உங்களால் சரியாகக் குறிப்பிட முடியுமா?

தி. சபாபதி, நெல்லை5

முடியும். அதற்கு முன்பாக ஒரு சின்ன கதை

அந்த தேசத்தில் கடும் பஞ்சம். பயிர்கள் நன்கு விளைந்தும் பஞ்சம் ஏற்பட்டு விட்டது. காரணம், வயல்வெளியில் பெருகிய எலிகள். அவை, எல்லாப் பயிர்களையும் நாசம் செய்ததுடன், விளைந்த தானியங்களையும் காலி செய்து, கடும் பஞ்சத்தை ஏற்படுத்தி விட்டன!

அந்த நாட்டு மன்னர், ஓர் அருமையான அறிவிப்பை வெளியிட்டார். எலியைப் பிடித்து வருபவர்களுக்கு ஓர் எலிக்கு எட்டணா வீதம் உதவித் தொகை தரப்படும்!என்று அறிவித்தார். திட்டம் சூடு பிடித்தது. மக்கள், எலியை வேட்டையாடிக் குவித்தார்கள். பயிர் செழித்து, பஞ்சம் நீங்கியது.

சிறிது நாட்களில் மீண்டும் பஞ்சம்! எலியைப் பிடித்து வந்தால், பணம் தரும் திட்டம் தொடர்ந்தும் பஞ்சம் வந்து விட்டது. ஏன் அப்படி? காரணத்தை அறிய விரும்பிய மன்னர், மாறு வேடத்தில் நகர்வலம் கிளம்பினார். அப்போதுதான் அவருக்கு ஒரு விஷயம் புலப்பட்டது!

ஆம், மக்களில் பலர் விவசாயமே செய்யவில்லை. விவசாய நிலங்கள் தரிசாகக் கிடந்தன. ஒரு விவசாயியைச் சந்தித்த மன்னர், ‘ஏன் இப்படி?’ என்று கேட்டார்.

எங்கள் ராஜா ஒரு மடையன். ஒரு எலிக்கு இவ்வளவு காசு என்று பணம் தருகிறான். அதனால், நாங்கள் விவசாயத்தை ஒதுக்கி விட்டு, எலிப் பண்ணை வைத்திருக்கிறோம். எலியை அரண்மனையில் கொடுத்துக் காசு வாங்கிக் கொள்வோம். வயலுக்குப் போய் உழைக்க எங்களுக்கு என்ன பைத்தியமா?’ என்றார் விவசாயி!

அரசாங்கத்தை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம், நம் நாட்டின் கடைசி குடிமகனுக்கும் என்றைக்கு இல்லாமல் போகுமோகுறித்து வைத்துக் கொள்ளுங் கள், அந்த நாளில் இந்தியா வல்லரசாகி விடும்.



நம்மில் பலர், எப்போதும் ஏதோ ஒரு துக்கத்திலேயே இருக்கிறார்களே ஏன்?

சு.கார்த்திகேயன், விழுப்புரம்

நான் பள்ளியில் படித்த காலம்.

ஒரு முறை, பஸ் பயணத்தின்போது கண்டக்டரைப் பார்த்ததும், என் நண்பன் <span

  1. guru
    August 8, 2008 at 6:13 AM

    thx u … keep to visit

    thx for ur interesting …………

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: